சனி, 5 செப்டம்பர், 2015

வாழ்க்கை:::

உன் வாயுதிர்க்கும் வார்த்தைகள்

வீணாய்க் கரையும் கற்பூரமாய்
காற்றோடு கரைந்திடுமா?

எழுத்துக்களின் கோர்வையாய்
ஏட்டோடு நின்றிடுமா? - அல்லது

கருத்துக்களின் மூலமாய், ஆழமாய்
வரலாற்றில் வாழ்ந்திடுமா?

என்பதைத் தீர்மானிக்கும்
கருவிதான் வாழ்க்கை!

                  -- தல்லிதாசன்

2 கருத்துகள்: