சனி, 5 செப்டம்பர், 2015

தருவாயா இழப்பீடு

கனவுகளைக் களவாடினாய்!
உறக்கத்தைத் திருடினாய்!

நினைவுகளில் நிறைந்தாய்!
வார்த்தைகளை வசப்படுத்தினாய்!

இப்படி சின்னசின்னதாய்
இழந்து நின்றேன் ஏராளம்!
இதயம் இழந்த நாள்முதல்!

இழப்பதற்கு ஏதுமில்லை
உயிரைத் தவிர!

என் உயிரையும் ஆட்கொண்டு
எனை உனதாக்கு!

இல்லையேல்!
இழப்பிற்கு ஈடாக!
காற்றோடு கரைந்து போகும்
வரம்கொடு எனக்கு!

                   --  தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக